வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:16 IST)

இதை செய்தால் என்னுடன் டேட்டிங் பண்ணலாம் - ரசிகர்களுக்கு இன்ப மகிழ்ச்சி கொடுத்த திரிஷா!

தமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா,தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரி சமமாக அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர் சென்னையை பூர்வீகமாக கொண்ட தெளிவான தமிழ் பேசும் ரசிகர்களின் கனவுகன்னி.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இருந்தாலும் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை த்ரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது "என்னுடன் டேட்டிங் வர ஆசைப்பட்டால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வா ர்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை எழுங்துங்கள்" அதில் வெற்றி பெறுபவர்கள் என்னுடன் டேட்டிங் வரலாம் என கூறியுள்ளார். த்ரிஷாவின் இந்த அறிவிப்பை கண்ட அவரது ரசிகர்கள் நிறைய யோசித்து இன்ட்ரெஸ்டிங்கான கட்டூரை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்படியும் மூட்டை கணக்கில் கட்டூரை வந்து குவியும் இதில் த்ரிஷா யாரை தேர்வு செய்வது வாய்ப்பளிக்கப்போகிறாரோ...! பார்ப்போம்.