புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 மே 2020 (08:49 IST)

நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் அதான் இப்படியெல்லாம்... நடிகை த்ரிஷா எமோஷ்னல் பதிவு!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா நேற்றைய முன்தினம் தனது     37வது பிறந்தநாளை கொண்டாடினார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிலிருந்தபடியே சிம்பிளாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைய்ப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் மல மலவென குவிந்தது.

இந்நிலையில் தற்போது தன் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறிய ரசிகர்களை குறித்து எமோஷனலாக பதிவிட்டுள்ள த்ரிஷா, " என் பிறந்தநாளை கொண்டாடுவத்தில் நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் எனக்கு காட்டும் அன்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு அன்பை பெறுவதற்கு நான் சிலர் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்களை செய்துள்ளேன் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டு வாழ்த்துக்கூறிய அத்தனை நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.