கர்ணன்’ படத்திற்கு முன்பதிவு தொடங்கியது: 50% சலுகை வழங்கிய ஏஜிஎஸ் தியேட்டர்!

karnan
'கர்ணன்’ படத்திற்கு முன்பதிவு தொடங்கியது:
siva| Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (19:44 IST)
தனுஷ் நடித்த 'கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆவது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 7 மணி முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். மிக வேகமாக திரை அரங்கில் உள்ள இருக்கைகள் காலியாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் 'கர்ணன்’ படத்திற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு உணவுப் பொருட்களில் 50% சலுகை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஜிஎஸ் திரையரங்கின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தியேட்டரில் 'கர்ணன்’ படத்திற்கு முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :