1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (18:00 IST)

’கர்ணன்’ ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறதா?

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தலுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
குறிப்பாக அண்டை மாநிலமான கர்நாடகாவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது போல் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் ’கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என்றும் திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் ரிலீசாகும் என்றும் தயாரிப்பு தரப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. எனினும் ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா அல்லது தள்ளிப்போகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்