திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 மே 2021 (12:01 IST)

கர்ணன் படத்தின் புதிய டீசரை வெளியிட்ட அமேசான் ப்ரைம்!

கர்ணன் படம் நாளை மறுநாள் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதை முன்னிட்டு புது டீசர் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.

இந்நிலையில் இப்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் 35 நாட்கள் கழித்து மே 14 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனின் ஒரு கட்டமாக புதிய டீசரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.