1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (16:37 IST)

KGF பட இயக்குநருடன் பேக் டூ பேக் கொடுக்கும் பிரபாஸ்??

சலார் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்ற பிரபாஸ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியாகி இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில் இயக்குனர் பிரசாத் நீல் பிரபாஸ் நடிப்பில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் முழுவதுமாக தயாராகி 2022ம் ஆண்டு ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இதற்கிடையே, 'சலார்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்ற பிரபாஸ் ஒப்புக்கொண்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் - பிரசாந்த் நீலின் இரண்டாவது படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டில் தொடங்கும் என ஆந்திர சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.