வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (15:45 IST)

ஒரு வழியாக திரைக்கதையை முடித்த இயக்குனர்… ஹீரோவுக்கு அனுப்பிவிட்டு வெயிட்டிங்!

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.

இந்நிலையில் இப்போது முழு திரைக்கதையையும் முடித்துள்ள ராம்குமார், திரைக்கதையை அமெரிக்காவில் இருக்கும் தனுஷுக்கு அனுப்பி வைத்துள்ளாராம். அவர் படித்துவிட்டு முடிவுகளை சொன்னதும் படத்தின் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.