உட்றாதீங்க எப்போவ்.. கர்ணன் படத்தின் நான்காவது பாடல் வெளியீடு!
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் நான்காவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் “கண்டா வர சொல்லுங்க”, “மஞ்சனத்தி புராணம்”, “திரௌபதி முத்தம்” ஆகிய மூன்று பாடல்கள் நேரடியாக யூட்யூபில் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றன. அந்த வகையில் நான்காவது பாடலாக “உட்றாதீங்க எப்போவ்” என்ற பாடலை தயாரிப்பாளர் தாணு ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த பாடல் யூட்யூப் வீடியோவாக இல்லாமல் மியூசிக்காக மட்டும் பிரபல ஆன்லைன் இசை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.