கொரோனா விதிமீறல்; விஜய் சேதுபதி படக்குழுவிற்கு அபராதம்!

Prasanth Karthick| Last Modified புதன், 31 மார்ச் 2021 (11:33 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வந்த படப்பிடிப்பில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பழனி அருகே திருமண மண்டம் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அங்கு மக்கள் பலர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர் படப்பிடிப்பில் கொரோனா விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாததால் படக்குழுவிற்கு ரூ.1500 அபராதம் விதித்துள்ளனர். கடந்த மாதம் பழனி அருகே இயக்குனர் ஹரியின் படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :