திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (19:02 IST)

’கர்ணன்’ பர்ஸ்ட்லுக் எப்போது? தனுஷ் டுவீட்!

நடிகர் தனுஷ் நடித்து முடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா அல்லது ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா என்ற ஆலோசனை தற்போது படக்குழுவினர் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக ஓடிடியில் ரிலீஸ் ஆகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான கர்ணன் திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விரைவில் ஃபர்ஸ்ட்லுக் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டை மிகவும் சிறப்பாக வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது