திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (15:54 IST)

’’நடிகர் விஜய்யின் ’’மாஸ்டர் ‘’ படக் கோரிக்கை ’’.....அமைச்சர் கடம்பூர் ராஜூ முக்கிய தகவல்

நடிகர் விஜய் முதல்வரிடம்  வைத்த கோரிக்கைக்கு ஏற்ப முதல்வர் பழனிசாமி விரைவில் நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும்  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதேசமயம் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று நடிகர் தனுஷ் மீண்டும் தியேட்டர் கலாச்சாரம் தொடங்கவே விஜய் சாரின் மாஸ்டர் படத்தை தியேட்டரில் பாருங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
 

தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 100% திரையங்குகள் திறக்க வேண்டுமென நடிகர் விஜய்  சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

 இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளதாவது :

வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 100% திரையங்குகள் திறக்க வேண்டுமென நடிகர் விஜய்  சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே முதல்வர் ஆலோசித்து நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்,ஏற்கனவே மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிகப்படும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.