1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:18 IST)

தனுஷுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

மாஸ்டர் படத்தை திரையரங்கில் சென்று பார்க்க சொன்ன தனுஷுக்கு அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் முதல்கட்டமாக இந்த படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ படம் குறித்து தனது டுவிட்டரில் நடிகர் தனுஷ் கூறியிருப்பதாவது: விஜய் அவர்களின் ’மாஸ்டர்’ ஜனவரி 13 அன்று வெளியாவது சினிமா பிரியர்களுக்கு ஒரு சிறந்த செய்தி ஆகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை. தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் பாருங்கள்’ என தனுஷ் குறிப்பிட்டு இருந்தார். அதைப் போலவே திரையுலக பிரமுகர்களான விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோரும் படம் குறித்து டிவீட் செய்திருந்தனர்.

இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் தனுஷுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.