திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (20:28 IST)

அந்த நடிகர் சுத்த தங்கம்: ஸ்ரீரெட்டி கொடுத்த நற்சான்றிதழ்

நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டி என்றாலோ அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்றாலோ கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று யார் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறப்போகின்றாரோ என்பதுதான் அனைவரின் பயமாக உள்ளது.
 
இந்த நிலையில் ஒரு நடிகரை சுத்த தங்கம் என்று ஸ்ரீரெட்டி நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.  அவர்தான் நடிகர் கரண். இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஒருநாள் கரண் அவர்களை ஓட்டல் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் பிகினி உடையில் காத்திருந்தேன்.
 
சொன்ன நேரத்தில் அவரும் வந்தார், ஆனால் அவர் எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில் அவர் வந்திருந்தது அவரது குடும்பத்தினர்களுடன். நான் தான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். கரண் ஒரு சுத்த தங்கம் என்று கூறியுள்ளார்.