முன்னணி நடிகைகள் வாயை திறந்தால் பெரிய லிஸ்டே இருக்கு - ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

Last Modified செவ்வாய், 17 ஜூலை 2018 (11:23 IST)
தற்போது சினிமாத்துறையில்  நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி டாப் நடிகைகள் தனது வாயை திறந்து உண்மையை கூறினால், பல உண்மைகள் வெளியே வரும் என நடிகை ஸ்ரீரெட்டி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

 
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.  
 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார்.

 
இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் “என்னை ஏமாற்றியவர்கள் லிஸ்ட் பெரியது என சிலர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல. சிலரே என்னை ஏமாற்றியுள்ளனர். தற்போது முன்னணி நடிகையாக உள்ள சிலர் வாயை திறந்து உண்மையை கூறினால், அவர்களை பயன்படுத்தியவர்களின் லிஸ்டை கேட்டால் அதுகேட்டு அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என ஒரு பதிவை இட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :