1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (11:45 IST)

முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி பேட்டி

நடந்த உண்மை என்ன என்பது இயக்குனர் முருகதாஸுக்கு தெரியும் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

 
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் சுந்தர். சி. ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ராகவா லாரன்ஸிடம் நான் மட்டும் ஏமாறவில்லை. எனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணும் இதே பிரச்சனையை அவரிடம் சந்தித்துள்ளார். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த உண்மையும் வெளியே வரும்” என மிரட்டும் தொனியில் பேசினார்.
 
அதேபோல், 4 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸை சந்தித்தேன். வேலிகொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் மூலமாக அவரை சந்திதது உண்மை. ஆதாரத்தை விட்டு விடுங்கள். என்ன எடந்தது என்பது அவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். மக்கள் முன்னிலையில் அவர் மறுத்தாலும், மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது. கடவுள் இருக்கிறார். அவர் தண்டிப்பார். அவர் தவறை உணர்ந்தாலோ எனக்கு போதும்” என தெரிவித்தார்.