திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:47 IST)

ரஜினியுடன் காஞ்சனா-3 ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று வரும் பொங்கல் தினத்தில் வெளியாக தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன்களும் முழு வேகத்தில் நடந்து வருகிறது.


 
இந்த நிலையில் பொங்கல் தினத்தில் 'பேட்ட' திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான 'காஞ்சனா 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி படத்துடன் முதல்முறையாக ராகவா லாரன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ள 'காஞ்சனா 3' படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெற்றி ஒளிப்பதிவில் எஸ்.தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.