திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (18:08 IST)

சென்சார் ஆனது 'பேட்ட': முழு விபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாவது 100% உறுதியாகிவிட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் இன்று இந்த படத்தின் சென்சார் பணியும் முடிந்துவிட்டது. சற்றுமுன் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'UA' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனையடுத்து இன்னும் சிலமணி நேரங்களில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அனேகமாக ஜனவரி 15ல் இந்த படம் வெளியாகும் என்றும், அஜித்தின் விஸ்வாசம்' ஜனவரி 10ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார், உள்பட பலர் நடித்துள்ளனர்.