செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:31 IST)

அலறவிடும் காஞ்சனா-3 ரிலீசுக்கு ரெடி!

ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3 ரிலீசுக்கு ரெடியானது..! 


 
ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது. தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் காஞ்சனா-2 திரைப்படமும் வெளியானது. ஆனால் இதன் அனைத்துப் பாகங்களிலும் ஹீரோவாக லாரன்ஸே நடித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது முனியின் 4-ம் பாகமாக, காஞ்சனா 3 படம் எடுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸுடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த வேதிகா இந்த நான்காம் பாகத்தில் நடிக்கிறார். தவிர, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த ஓவியா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். 
 
தற்போது இந்தத் திரைப்படத்தின் படபிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 2019, ஏப்ரலில் திரைக்கு வரும் எனவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. பெரும்பாலும் தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
அதோடு நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட' ரிலீஸோடு சேர்த்து, காஞ்சனா 3-யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. .