வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (09:24 IST)

கங்குவா ரிலீஸில் ஏற்பட்ட கடைசி நேர சிக்கல்… 35 கோடி ரூபாய் கொடுத்தாரா சூர்யா?

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா முதல் காட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாள் வசூலே 58 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முந்தைய பைனான்சியரிடம் வாங்கிய மிகப்பெரிய தொகை கடனாக வந்து நிற்க, அதைக் கொடுத்தால் ரிலீஸாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வேறு வழியில்லாமல் சூர்யா சுமார் 35 கோடி ரூபாய்க்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பட ரிலீஸுக்கு உதவி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.