வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (08:35 IST)

இன்னும் 1942 கோடிதான் பாக்கி… கங்குவா முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படம் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. இந்நிலையில் 2000 கோடி ரூபாய் டார்கெட் வைக்கப்பட்டு ரிலீஸ ஆன கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. தமிழகத்தில் முதல் காட்சிக்குப் பிறகே நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கியதால் கூட்டம் வருவது குறைந்தது.

இந்நிலையில் இந்த படம் உலகளவில் முதல் நாளில் 58 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இதையும் நெட்டிசன்கள் ட்ரோல் பண்ணத் தொடங்கியுள்ளது. இன்னும் 1942 கோடி ரூபாய்தான் பாக்கி என மீம்கள் பறந்து வருகின்றன.