1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (13:54 IST)

பிக்பாஸ் விட்டிலிருந்து வெளியேற போகும் முதல் நபர் யார்?

பிக்பாஸ் விட்டிலிருந்து முதலில் வெளியேற்றப்படும் நபர் யார்? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமடைந்துள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.  
 
பிக்பாஸ் வீட்டில் நிறைய விதிமுறைகள் உள்ளது. அதில் ஒரு முக்கிய விதிமுறை ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் ஒருவர் வெளியேற்றபடுவது வழக்கம். இதற்காக கடந்த திங்கட்கிழமை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கன்பெக்சன் அறையில் வெளியேற்றும் இரண்டு நபர்களின் பெயர்களை கூறினர். இதனையடுத்து, பிக்பாஸ் இந்த வாரம் பொன்னம்பலம், மும்தாஜ், மமதி, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் எவிக்ட் ஆகியுள்ளதாக அறிவித்தார்.
 
இந்நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் விட்டிலிருந்து வாக்கு அடிப்படையில் வெளியேற்ற படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமடைந்துள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.