1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (19:23 IST)

நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

kamalhasan
நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டி.எஸ். பாலய்யாவின் மகன் ஜீனியர் பாலையா. இவர், கரகாட்டக்காரரன், சுந்தர காண்டம், சாட்டை,கும்கி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார்.

இன்று அதிகாலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே காலமானார். சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் மற்றும் சினிமாத்துறையினர், ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தன் வலைதல பக்கத்தில், ‘’பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.