1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Indian 2 music rights bought by sony music

இந்தியன் 2 இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இந்தியன் 2
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று படத்தின் இசை உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நேத்து பேசுன பேச்சு! தலைமறைவான இயக்குனர் ரத்னகுமார்..!? – ரஜினி ரசிகர்கள் காரணமா?