1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Zee studios wants to buy Ramcharan teja gamechanger

ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? மொத்தமாக வாங்க துடிக்கும் ஜி ஸ்டுடியோஸ்!

ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமன் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை ஷங்கர் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவர்தான் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் சேர்த்து 275 கோடி ரூபாய்க்கு வாங்க ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கேம்சேஞ்சர் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இருப்பதால் தமிழிலும் இந்த படத்துக்கு நல்ல டிமாண்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங்!