1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Kamalhaasan Indian 2 shooting starting today in chennai

இன்று முதல் மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங்!

இந்தியன் 2
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இன்று முதல் சென்னையில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் தீபாவளிக்குப் பின்னர் விசாகப்பட்டணத்தில் தொடங்கி நடக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? மொத்தமாக வாங்க துடிக்கும் ஜி ஸ்டுடியோஸ்!