1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Superstars to release 'ndian 2 in Kannada Telugu today

'இந்தியன் 2' இன்ட்ரோவை மற்ற மொழிகளில் ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்கள்

Kamal Haasan
இந்திய சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ பட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்தியன் படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் இதன் ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில்,  இந்தியன் 2 பட  இன்ட்ரோவை நாளை மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்தியன் பட இந்தி இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் அமீர்கானும், மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன் லாலும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், தெலுங்கில்  ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் ராஜமெளலி வெளியிடவுளனர் என்று தெரிவித்துள்ளது.

கமல்- ஷங்கர் கூட்டணியில் 2 வது படமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் மீதான  எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மலும் அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரையில்
நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்