அடுத்த மாதம் ரிலீஸாகுமா ‘விஸ்வரூபம் 2’?

kamalhassan
cm| Last Modified வியாழன், 4 ஜனவரி 2018 (13:51 IST)
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் அடுத்த மாதம் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கமல்ஹாசன் இயக்கி, நடித்த படம் ‘விஸ்வரூபம்’. பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ் நடித்த இந்தப் படம், 2013ஆம் ஆண்டு ரிலீஸானது. அதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தை எடுக்கத் தொடங்கினார் கமல்ஹாசன். ஆனால், பைனான்ஸ் பிரச்னையால் அந்தப் படம் பாதியிலேயே நின்றது. பொறுத்துப் பார்த்த கமல்ஹாசன், தானே அந்தப் படத்தை வாங்கி மீதியுள்ள காட்சிகளை எடுத்தார். சவுண்ட் மிக்ஸிங்கையும் சமீபத்தில் அமெரிக்கா சென்று முடித்தார். பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்நிலையில், எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மாதம் முழுக்க தியேட்டர்கள் புக்காகி விட்டன. தேர்வுகள் நடப்பதால், பொதுவாக இந்த மாதத்தில் எந்த பெரிய படங்களையும் வெளியிட மாட்டார்கள். ஏப்ரல் மாதம் ரஜினியின் ‘2.0’ ரிலீஸாவதால், அந்த மாதத்திலும் ரிலீஸ் செய்ய முடியாது. மே மாதம் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் தொடங்க இருப்பதால், பிப்ரவரியில் ரிலீஸ் செய்தால் மட்டுமே உண்டு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கமல்ஹாசன்.


இதில் மேலும் படிக்கவும் :