1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (13:55 IST)

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்குமா?: எச்.ராஜா பதில்!

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்குமா?: எச்.ராஜா பதில்!

நடிகர் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த உடனே தமிழக அரசியலில் ரஜினி குறித்த பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்பதற்கு எச்.ராஜா பதிலளித்துள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 31-ஆம் தேதி அறிவித்தார். மேலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறி சர்ச்சைக்கும் வித்திட்டார். இதனால் அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
 
மேலும் அரசியலில் இறங்கியுள்ள ரஜினி வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என கூறினார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இந்துத்துவா என்பது வாழ்க்கைக்கான நெறிமுறை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. மக்களின் இயல்புதான் ஆன்மிகம். அதைத்தான் ரஜினியும் கூறியுள்ளார் என தெரிவித்தார்.
 
மேலும் ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா, நாடாளுமன்றத் தேர்தலின்போது அது குறித்து முடிவெடுக்கப்படும் என ரஜினி கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். கூட்டணி குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.