1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (13:09 IST)

நடிகர் கமல் - தினகரன் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டு!

நடிகர் கமல் - தினகரன் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டு!

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இவரது வெற்றியை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்ததை அடுத்து இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததாக பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் வந்தன. பல அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டன. தினகரன் தரப்பும் பணப்பட்டுவாடா செய்ததாக பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.
 
பல முனை போட்டி, ஆளும் கட்சியின் அதிகார அணுகுமுறை, பணப்பட்டுவாடா போட்டி என ஆர்கே நகர் தேர்தல் களம் அதகளமானது. இதில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரசியல் கட்சியினரை வியக்க வைத்தார்.
 
இந்நிலையில் தினகரனின் இந்த வெற்றியை விமர்சித்த நடிகர் கமல், இந்த வெற்றி ஆகப்பெரிய அவமானம். இது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி என கூறினார். இதற்கு டிடிவி தினகரன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். நடிகர் கமலின் விமர்சனம் வாக்களித்த ஆர்கே நகர் மக்களை அவமானப்படுத்தும் செயல் என அவர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.