ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (10:38 IST)

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை நேற்று உற்சாகமாக கொண்டாடினார்.



தற்போது சிவகார்த்திகேயன் மிஸ்டர். லோக்கல் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் டீசர் வொளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் வரும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் மிஸ்டர். லோக்கல் படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார்  படத்திலும், இரும்பு திரை இயக்குனர் மித்ரன் படத்திலும் நடிக்க உள்ளார். மித்ரன் இயக்க உள்ள எஸ்கே15 படத்தில் மறைந்த இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது.