புதன், 9 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 4 ஜூலை 2016 (13:04 IST)

மீண்டும் தள்ளிப் போகிறதா கபாலி...? வெளிநாட்டு போஸ்டர்களால் குழப்பம்

மீண்டும் தள்ளிப் போகிறதா கபாலி...? வெளிநாட்டு போஸ்டர்களால் குழப்பம்

கபாலி படத்தின் வெளிநாட்டு போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஜுலை 29 படம் வெளியாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 
 
கபாலி ஜுலை 1 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ஜுலை 15 என்றனர். பிறகு மீண்டும் ஒருவாரம் தள்ளிப் போய், ஜுலை 22 என்றனர். இப்போது வைரலாக பரவிவரும் வெளிநாட்டு போஸ்டர்களால் மீண்டும் தேதியில் மாற்றமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
ஒரு படம் எப்போது வெளியாகும் என்பது முதலில் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கே அறிவிக்கப்படும். வெளிநாடுகளிலும் படத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்பதால் அவர்களிடமே முதலில் தெரிவிப்பார்கள்.
 
கபாலி 29 வெளியீடு என வெளிநாடுகளில் விளம்பரம் செய்கின்றனர். ஆக, ஜுலை 29 கபாலியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்