ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (19:56 IST)

’சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் திருமணம்.. சீரியல் நடிகையுடன் நிச்சயதார்த்தம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் வெற்றி வசந்த், நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த், பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி சுந்தர் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சின்னத்திரை உலகினர் பல வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாவில் இந்த வாரம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டு, தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva