திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (20:17 IST)

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார் சாச்சனா.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்யும் அதிரடி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரம் முடிவதற்கு உள்ளாகவே சாச்சனா என்ற போட்டியாளரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதே சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் சீசன் எப்படி இருக்கும் என்று தெரியாததால் டிஆர்பிக்காக அதிரடியாக 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை விஜய் டிவி வெளியேற்றி இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் விஜய் டிவி மீது பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் உருவானதை அடுத்து அதை சரி கட்ட மீண்டும் சாச்சனாவை உள்ளே அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

அநேகமாக இன்னும் ஒரு சில வாரங்களில் போட்டியாளராக சாச்சனா உள்ளே வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் சாச்சனா வெளியேற்றப்படுவார் என்று முன்கூட்டியே அவருக்கு தெரியும் என்றும் ஏற்கனவே இது திட்டமிட்ட பிளான் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரே நாளில் சாச்சனா லட்சக்கணக்கான பார்வையாளர்களின் இதயத்தை வென்ற நிலையில் மீண்டும் அவர் உள்ளே வர இருக்கிறார் என்ற தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva