1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (15:38 IST)

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பதில் காமெடி நடிகரா? பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

Manjal Veeran
மஞ்சள் வீரன் என்ற படத்தில் டிடிஎஃப் வாசன் நடிப்பதாக இருந்த நிலையில், சமீபத்தில் அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, இந்த படத்தின் நாயகனாக கூல் சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மஞ்சள் வீரன் என்ற படத்தில் டிடிஎஃப்  வாசன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் இயக்குனர் செல் அம் என்பவர் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக சமீபத்தில் அறிவித்தார். டிடிஎஃப் வாசனால் படப்பிடிப்புக்கு சரியாக வர முடியவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தற்போதைய நிலவரப்படி, டிடிஎஃப் வாசன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் கூல் சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் உண்டு.

மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் கூல் சுரேஷ் தியேட்டர் முன் அலப்பறையை கூட்டிய நிலையில் தற்போது அவரே ஹீரோவாக இருக்கும் நிலையில் கூல் சுரேஷின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Edited by Siva