திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (15:44 IST)

மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Dhanush
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து, இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.
 
இதனை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகாததால், அதை அடுத்து அக்டோபர் 19ஆம் தேதிக்கு இந்த மனு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்டோபர் 19ஆம் தேதியும் இருவரும் ஆஜராகவில்லை என்றால், இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா என்ற எண்ணம் எழும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva