ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:25 IST)

'நவ்ரஸ் கதா காலேஜ்' திரைப்படத்திற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வித்தியாச மான விளம்பரம்!

'நவ்ரஸ் கதா காலேஜ்' திரைப்படத்திற்கு  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை வழி  விளம்பரத்தை தாங்கிய சிறப்பு விளம்பர வாகன பயணத்தை  படக்குழுவினர்கள் நிறைவு செய்தனர்.
 
இது குறித்து  கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குனருமான பிரவீன் ஹிங்கோனியா பேசியதாவது......
 
58 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற  வரவிருக்கும் இந்தி திரைப்படத்தின் பான் இந்தியா ப்ரோமோஷனை இப்போது முடித்துள்ளோம்.
 
நாடு முழுவதும் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாகா பார்டர், கோல்டன் டெம்பிள், ஜாலியன் வாலா பாக், கட்கர் காலான் தொடங்கி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி  வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை எங்கள் படக் குழுவினரோடு முடித்துள்ளோம்.
 
எங்கள் கருத்தாழம் மிக்க திரைபடத்தின் ட்ரெய்லருக்கு பொதுமக்கள் பெருவாரியான வரவேற்பை அளித்தனர். 
 
இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை கண்டிராத பணியை “நவ்ரஸ் கதா கொலாஜ்” குழுவினர் சாதித்துள்ளனர்.
 
படத்தின் விளம்பரத்திற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைப் பயணம் மேற் கொண்டுள்ளோம்.
 
இந்த டிரெய்லரை இந்திய ராணுவ வீரர்களுக்கும் காட்டப்பட்டது, அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
பாரத் பிரிமானுக்காக ஒரு சிறப்பு வேனிட்டி வேன் தயார் செய்யப்பட்டது, அதில் நவ்ரஸ் கதா காலேஜ் படத்தின் விளம்பரத்திற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து குழுவினரும் இந்த வேனில் பயணம் செய்தனர், பிரவீன் ஹிங்கோனியா தனது சமூக படத்தின் தீம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 
இந்த படத்தில் 9 சவாலான கேரக்டர்களில் நடித்த எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன் ஹிங்கோனியா, தமிழ் சினிமா என்றுமே மறக்கமுடியாத. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் இந்தி திரைப்பட நடிகர் சஞ்சீவ் குமார் ஆகியோருக்கு  தன் நன்றி காணிக்கை என தெரிவித்தார்.