திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (19:55 IST)

சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மலையாள திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்

சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மலையாள திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ’அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜூமேனன் நடிப்பில் உருவாகிய இந்தத் திரைப்படம் பெரும் 5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 55 கோடி ரூபாய் வசூல் செய்ததால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 50 கோடி ரூபாய் லாபம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரித்விராஜ் கேரக்டரில் சசிகுமாரும், பிஜூமேனன் கேரக்டரில் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தமிழை அடுத்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் பெற்றிருப்பதாகவும், லாக்டவுன் பரபரப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் தமிழில் சசிகுமார் நடிக்கும் கேரக்டரில்தான் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாகவும் பிஜூமேனன் கேரக்டரில் ஒரு முன்னணி பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ், ஹிந்தியை அடுத்து த்ரிஷ்யம் படம் போல் இந்த திரைப்படமும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது