நாடு திருப்பினார் பிரித்விராஜ்.... மகிழ்ச்சியான செய்தி வெளியிட்ட மனைவி!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 22 மே 2020 (14:05 IST)

கொரோனா வைரஸ் தாக்குதலால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த திரைத்துறையினரும் வீட்டில் இருந்து வருகின்றனர். . ஆனால், மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக

58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டார் .


ஊரடங்கு காரணத்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால்
அவரகள் தாய் நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வந்தனர். இது பற்றி நடிகர் பிரித்விராஜ் சமீபத்தில் உணவுக்கு கூட பஞ்சமாக இருப்பதாக கூறி ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். இந்த தகவல் அனைவரையும் உருக்குலைத்தது. இதையடுத்து அவரது மனைவி கணவரின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்திருந்தார். அவ்வப்போது கணவரை பிரிந்து உருக்கமான பதிவுகளை போட அவருக்கு ஆறுதலான வார்த்தைக்கூறி அனைவரும் சமாதானம் செய்தனர். அப்பா வீட்டிற்கு வரப் போகிறார் என்று அவரது செல்ல மகள் சந்தோஷமாக போர்டில் எழுதிய வீடியோவை மனைவி சுப்ரியா மேனன் இன்ஸ்டாவில் வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இந்நிலையில் தற்போது அனைவரது பிரார்த்தனையும் நிறைவேறியது. ஆம், நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படக்குழுவினருடன் அம்மானில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் இன்று காலை கொச்சி வந்திறங்கியுள்ளார். அங்குள்ள குவாரன்டைன் மையத்தில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு பிரித்விராஜ் வீடு திரும்புவார். இதையடுத்து அவரது மனைவி கணவருக்கு உதவிய அதிகாரிகள் முதல் பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :