செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மே 2020 (07:52 IST)

முந்தானை முடிச்சு ரீமேக் படம் பற்றிய வதந்தி… வெளியான உண்மைத் தகவல்!

முந்தானை முடிச்சு படத்தை பாக்யராஜ் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்க இருப்பதாக வெளியானத் தகவலைப் படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

பாக்யராஜின் திரை வாழ்விலும் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க இருப்பதாகவும் பாக்யராஜே மீண்டும் இயக்க இருப்பதாகவும் நேற்று ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில் பாக்யராஜ் படத்தை இயக்க இருக்கிறார் என்பது மட்டும் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. அவர் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை மட்டுமே மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ஜே.எஸ்.பி சதீஷ் குமார் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த தேர்வு குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.