ஜெயம் ரவி கேரியரில் அட்டர் ப்ளாப் ஆனதா அகிலன்?
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் தாமதம் ஆகி வந்த நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த ரிலீஸாக அகிலன் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் கொஞ்சம் கூட ரசிகர்களைக் கவரவில்லை. ஜெயம் ரவியின் கேரியரில் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.