வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (09:08 IST)

ஹாலிவுட் இயக்குனர் டாரண்டினோவின் 10 ஆவது படம் பற்றி பரவும் தகவல்!

இயக்குனர் குயிண்டன் டாரண்டினோவின் படமாக்கல் பாணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இதுவரை அவர் 9 படங்கள் இயக்கியுள்ள நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலான படங்கள் உலகம் முழுவதும் வெற்றி பெற்றவை. இதையடுத்து அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஹாலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகராக இருந்த பாலின் கேல் என்பவரின் வாழ்க்கைய அடியொற்றி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு ‘தி மூவி கிரிட்டிக்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

டாரண்டினோ தன்னுடைய 10 ஆவது படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 10 ஆவது படத்துக்குப் பிறகு டாரண்டினோ, நாடக உலகம் மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.