திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (19:55 IST)

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த கவர்னர் அறிவுறுத்தல்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அறிவுரைத்துள்ளார். 
 
சென்னை அம்பத்தூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துக்கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva