1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (15:57 IST)

தமிழ் நாட்டில் ஜெயிலர் வசூலை ஜவான் நெருங்க முடியாது: திருப்பூர் சுப்பிரமணியன்

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயிலர் வசூலை ஜவான் திரைப்படத்தின் வசூல் நெருங்க கூட முடியாது என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. நான்கே நாட்களில் இந்த படம் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் தாண்டிவிட்டது என்றும் கூறப்பட்டது. 
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் வசூல் பக்கம் கூட ஜவான் படத்தின் வசூல் நெருங்க முடியாது என திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
முதல் இரண்டு நாட்கள் மட்டும் தான் ஜவான் படத்திற்கு வசூல் நன்றாக வந்தது என்றும் அதன் பிறகு அந்த படத்தின் வசூல் தமிழகத்தை பொறுத்தவரை குறைந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.  
 
சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஜவான் திரைப்படத்திற்கு முன்பதிவு சுத்தமாக இல்லை என்றும் தியேட்டர்கள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva