திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:38 IST)

ஜெயிலர் படம் பார்த்த எங்களுக்க்தான் தங்க காசு கொடுக்க வேண்டும்… விசிக வன்னி அரசு நக்கல் ட்வீட்!

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. உலகளவில் திரையரங்கில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படக் கலைஞர்கள் 300 பேருக்கு நேற்று தங்கக் காசு வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் பரவின.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னி அரசு பதிவு செய்துள்ள ட்வீட்டில் “சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த #ஜெயிலர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் காண நேர்ந்தது. இப்படம் வெற்றி வெற்றி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து கதாநாயகன்,இயக்குனர், இசை அமைப்பாளர் என மூன்று பேருக்கும் விலை உயர்ந்த காரை பரிசளித்தது. இப்போது திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்க காசு பரிசு அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு உண்மையிலேயே நேர்மை இருந்தால், சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும் ஜெயிலர் திரைப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தங்க காசு போன்ற ஏதாவது பரிசு அறிவித்திருக்க வேண்டும். எந்த வகையிலும் சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்.” என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.