திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (17:22 IST)

நான்கே நாட்களில் ‘ஜெயிலர்’ வசூலை முந்திய ‘ஜவான்’: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Jawan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் நான்கே நாட்களில் அந்த வசூலை தாண்டி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
கடந்த வியாழன் அன்று ஜவான் திரைப்படம் வெளியான நிலையில் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் 520.79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்னும் இந்த படத்திற்கு நல்ல கூட்டம் வந்து கொண்டிருப்பதால் இந்த படம் பதான் போலவே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் செய்து கொண்டிருப்பது பட குழுவினர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது