வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (06:56 IST)

முதல் முறையாக இசையமைப்பாளரைக் கௌரவ படுத்தியுள்ளார்கள்… அனிருத் நெகிழ்ச்சி!

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. உலகளவில் திரையரங்கில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கூடுதல் பணம் மற்றும் சொகுசு கார்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அனிருத்துக்கும் இது போல கார் அளிக்க வேண்டும் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, அவருக்கும் காசோலையும் சொகுசு காரும் அளிக்கப்பட்டது.

இதுபற்றி இப்போது பேசியுள்ள அனிருத் “ஜெயிலர் படமே எனக்கு பெரிய கிஃப்ட்தான். முதல் முறையாக இசையமைப்பாளரை கௌரவித்துள்ளார்கள். தயாரிப்பாளர் கொடுத்த காரை பொக்கிஷம் போல பத்திரமாக வைத்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.