திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (19:49 IST)

ரஜினிகாந்தை சந்தித்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ் குழு!

rajini -shenbakaraman
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ். இந்த நிறுவனம், எந்திரன், சுறா, பேட்ட, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில், ஜெயிலர் படத்தை தயாரித்திருந்தது.

‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு  செக் வழங்கி வாழ்த்திய துடன், தனித்தனியே அவர்களுக்கு சொகுசு கார் வழங்கினார் கலாநிதி மாறன்.

இந்த  நிலையில், ஜெயிலர் பட வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சன்பிக்சர்ஸ் சார்பில் ஏழை எளியோருக்கு உதவி செய்யும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தை தமிழகம் முழுவதும் திரையிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக அதன் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துகளை கூறினர்.

இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.