ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ பட புதிய அப்டேட்: ரசிகர்கள் மகிழ்ச்சி

g v prakashkumar
ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ பட புதிய அப்டேட்
siva| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:31 IST)
நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தான் நடித்து வரும் படங்கள் மற்றும் இசையமைத்து வரும் படங்கள் குறித்த அப்டேட்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தற்போது தான் நடிப்பில் இசையமைத்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’ஜெயில்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ’ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற பிரண்ட்ஷிப் ஆன்ந்தம் என்று கூறப்படும் பாடலான ’பத்து காசு’ என்ற பாடல் வரும் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்

ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான ’காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் பாடிய பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்து அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

ஜிவி பிரகாஷ், ராதிகா, ரோனிட் ராய், கவுதம் குலாட்டி, சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ரோபோ சங்கர், பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படல் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும்


இதில் மேலும் படிக்கவும் :