ஜி.வி இசையில் தனுஷ், அதிதி பாடிய “காத்தோடு காத்தானேன்” – நாளை வெளியீடு

Jail
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 14 ஜூன் 2020 (11:35 IST)
ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள ‘ஜெயில்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படுவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘ஜெயில்’. இந்த படத்தில் நடித்துள்ளதோடு இசையும் அமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த படத்தின் முதல் பாடலான ‘காத்தோடு காத்தானேன்” நாளை வெளியாகிறது. நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் பாடியுள்ள இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

இந்த பாடலை நாளை மாலை 6 மணிக்கு தனுஷ் தனது ட்விட்டர் மூலமாக வெளியிடுவதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :