வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (15:26 IST)

போதை பொருட்களுக்கு எதிராக களமிறங்கிய ஏ.ஆர். ரஹ்மான் , ஜிவி பிரகாஷ் - வீடியோ!

ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் மாதம் 26ம் தேதி போதை மருந்து பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வளரும் தலைமுறையினருக்கு போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகளை குறித்து பலதரப்பு மக்களிடையே விழிப்புணர்வு செய்யப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போதை பொருட்கள் உபயோகிப்பதால் கொடூர குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்கை சீரழிவு உள்ளிட்ட பல விளைவுகளை தடுக்க போதை பொருட்களை ஒழிப்போம்  இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதே போல் இசையமைப்பிலார் ஜி.வி பிரகாஷ் போதை பொருட்களுக்கு எதிரான " Say No To Drugs " என்ற விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். " யாருக்கில்லை சோகம்... யாருக்கில்லை தோல்வி போதை என்பது தீர்வல்ல" என்ற அருமையான வார்த்தைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை  ஜி.வி பிரகாஷ்  இசையமைத்து பாடியுள்ளார். மதன் கார்க்கி பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#saynotodrugs #worlddrugabuseday2020

A post shared by @ arrahman on